மரபும் மரபு சார்ந்தும்

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ. கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள். மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது. மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் […]

Read more

நுகர்வெனும் பெரும்பசி

நுகர்வெனும் பெரும்பசி, ராமச்சந்திர குஹா, தமிழில் போப்பு, எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, விலை 190ரூ. அறிவியலை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும்போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது என்று சொன்னவர் மகாத்மாக காந்தி. வளர்ச்சி என்ற பெயரால் அறிவியலைப் பொருளாதாரப் பூதமாக்கி, சுற்றுச்சூழலைச் சுத்தமாக துடைத்தெறிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், ராமச்சந்திர குஹாவின் இந்தப் புத்தகம் வந்துள்ளது. சுற்றுச்சூழலியலின் கடந்த கால வரலாறு எப்படி இருந்தது, […]

Read more