வீரப்பன் மரணம் யாரால் எப்படி?
வீரப்பன் மரணம் யாரால் எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் வெளியீடு, பக். 312, விலை 300ரூ.
சந்தன கடத்தல் வீரப்பன் மரணம் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகம். வீரப்பனை சந்தித்து நக்கீரன் குழுவினர் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறன்மனை நோக்கா ஒழுக்க சீலன், பெண்களை மதிப்பவன் என்று நூல் முகப்பில் சித்தரிக்கப்படும் வீரப்பன், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடிப் படையின் தேடலில் ராஜதந்திரம் தெரிந்தாலும், மலைவாழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன. அது பற்றி விரிவாக சித்தரிக்கிறது நூல். காட்டில் சுற்றி வளைத்துச் சுட்டதில், உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்து வீரப்பன் இறந்ததாக தமிழக அரசின் அதிரடிப்படை கூறியது. அதற்கு முரணாக, உணவில் சயனைடு கலந்து கொல்ல முயன்றதாகவும், பின் வதைத்து கொன்றதாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல்களால் நிரம்பிய நூல்.
-மெய்ஞானி பிரபாகரபாபு.
நன்றி: தினமலர், 17/5/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818