வீரப்பன் மரணம் யாரால் எப்படி?

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் வெளியீடு, பக். 312, விலை 300ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் மரணம் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகம். வீரப்பனை சந்தித்து நக்கீரன் குழுவினர் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறன்மனை நோக்கா ஒழுக்க சீலன், பெண்களை மதிப்பவன் என்று நூல் முகப்பில் சித்தரிக்கப்படும் வீரப்பன், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடிப் படையின் தேடலில் ராஜதந்திரம் தெரிந்தாலும், மலைவாழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன. அது […]

Read more

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more