வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ.

தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘

காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் தகவல்களாக, விறுவிறுப்பான வகையிலும் மர்ம நாவல்களை மிஞ்சும் வகையிலும் தரப்பட்டுள்ளன.

சரண் அடைவது தொடர்பாக வீரப்பன் அளித்த 9 மணி நேர பேட்டியின் விவரம், இந்த நூலுக்கு சிகரம் வைத்ததுபோல அமைந்து இருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய ஆதாரப்பூர்வமான நல்ல ஆவணமாக இதைக் கொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி, 27/2/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027839.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.