வீரப்பன்
வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360;
சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது.
வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 மைல்கள் நடந்து சென்றது, வீரப்பனின் ஆறு மணி நேரப் பேட்டியை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ஏற்பட்ட இடையூறுகள், வீரப்பனோடு காட்டில் தங்கி அவரை நேர்காணல் செய்தது, வீரப்பனின் குடும்பம், அவருடைய தயாள குணம், சிறுவயதில் வீரப்பன் யானையை வேட்டையாடிய முதல் அனுபவம், வீரப்பனின் பேட்டியைக் கேமராவில் பதிவு செய்யும்போது, ஒளிப்பதிவு செய்வதை நிறுத்தச் சொல்லிவிட்டு, காட்டின் அடையாளம் காவல்துறைக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக போர்வையைக் கொண்டுபின்புலத்தை வீரப்பன் மறைத்தது, பிணைக் கைதிகளை விடுவிக்க வீரப்பன் விதித்த நிபந்தனை, கர்நாடக முதல்வர் தேவேகவுடாவுக்கு வீரப்பன் எழுதிய கடிதம் என வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
நூலை வாசிக்கும்போது நாமே காட்டுக்குள் பிரவேசிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. காட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய வீரப்பனின் குணாதிசயங்களைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 4/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027839.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818