ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?
ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், வசந்த்பதிப்பகம், பக்.656, ரூ.700.
ஏற்றுமதி தொழில் செய்வது தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கிய நூல். ஏற்றுமதி தொழில் செய்வதற்கு செய்ய வேண்டியவைகளான நிறுவனப் பெயர் அமைப்பது, அந்த நிறுவனம் பிரைவேட் நிறுவனமா அல்லது, பார்ட்னர்ஷிப்பா என்று முடிவு செய்வது, பான் கார்டு வாங்குவது, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, ஏற்றுமதி பொருளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட பல அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன.
எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதால் என்ன லாபம்? எவ்வாறு பேக்கிங் செய்ய வேண்டும்? ஏற்றுமதி – இறக்குமதி பொருட்களை கப்பல் அல்லது விமானத்தில் ஏற்ற உதவும் கஸ்டம் புரோக்கர்கள் என்ன செய்கிறார்கள்? பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது அதற்குச் சான்றாக என்ன ஆவணங்களைப் பெற வேண்டும்? இறக்குமதியாளர்கள் என்ன சான்றிதழ்களைக் கேட்பார்கள், கூரியர் மூலம் எவ்வளவு ஏற்றுமதி செய்யலாம்? ஏற்றுமதி ஒப்பந்தம் ஏன் போட வேண்டும்? வியாபாரத் தகராறுகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்பன போன்ற பல்வேறு ஐயங்களுக்கு இந்நூல் தெளிவாக விடை சொல்கிறது.
உலகில் ஏற்றுமதித் தொழில் எவ்வாறு நடைபெறுகிறது? எந்த நாடுகள் ஏற்றுமதி செய்வதில் கொடி கட்டிப் பறக்கின்றன? ஏற்றுமதி தொழிலில் இந்தியாவின் நிலை என்ன? தமிழ்நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எவை? என்பன போன்ற தகவல்களும் உள்ளன. ஏற்றுமதி தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 4/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027838.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818