வைணவமும் வைணவத் திருத்தலங்களும்
வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ.
உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. வைணவம் பற்றிய முழு விவரத்தையும் ஒருங்கே தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், அனைத்து ஆன்மிகவாதிகளுக்கும் நல்ல வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 5/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818