வீரப்பன்
வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ.
கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன.
யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை!
வீரப்பனுடனான நேரடி பேட்டி, அத்தியாயம், 14ல் ஆரம்பிக்கிறது. இது, வீரப்பன் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது.
காடு, மலை என நம்மை அழைத்து செல்வதிலும், வீரப்பனிடம் நேர்காணல் எடுத்ததை நமக்கு சொல்வதிலும், எளிய நடையை கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.
– அனு ரெக்சின்
நன்றி: தினமலர், 3/3/2019.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027839.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818