நடிகர் திலகம் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.
—-
கசடறக் கற்க கற்பிக்க, மு. கனகலட்சுமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 100ரூ.
ஒரு கையேடாக உருவாகியிருக்கும் இந்நூலில் குழந்தைகள் தமிழ் மொழியை எழுதிப் பழக புதிய முறை விளக்கப்படுகிறது. இந்நூலைக் கொண்டு ஒலி, வரி, கற்றல் முறையில் பயிற்சி பெறும் குழந்தை ஒரு போதும் எழுத்துப் பிழை செய்யாது. 41 நாட்களில் கற்றுக்கொள்ளும் முறை, நூலில் விளக்கப்படுகிறது. -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.