1000 செய்திகள்

1000 செய்திகள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. இது முக்தா வீ. சீனிவாசனின் 140வது புத்தகம். இதில் இல்லாத தகவல்களே இல்லை என்பதுபோல், நம் ஊர் பாரதி பற்றிய தகவல்கள் தொடங்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றோரின் கருத்துக்கள், அறிவியலாளர்கள், நடிகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இசைஞானிகள், சாதனையாளர்கள், ஆன்மிகவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

விடியலை நோக்கி

விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more