1000 செய்திகள்
1000 செய்திகள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. இது முக்தா வீ. சீனிவாசனின் 140வது புத்தகம். இதில் இல்லாத தகவல்களே இல்லை என்பதுபோல், நம் ஊர் பாரதி பற்றிய தகவல்கள் தொடங்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றோரின் கருத்துக்கள், அறிவியலாளர்கள், நடிகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இசைஞானிகள், சாதனையாளர்கள், ஆன்மிகவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 7/9/2016.
Read more