கம்பன் பிறந்த தமிழ்நாடு

இவர்களும் நானும், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, இரண்டாம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை: ரூ. 70.

தன் மனம் கவர்ந்தவர்கள், சாதனையாளர்கள் பற்றி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய புத்தகம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் பற்றி எழுதியிருப்பதைக் கூட ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறப்பான நடை.

பரமரகசியம் (பாகம் 1), ராஜா சுப்பிரமணியன், சநாதநா பதிப்பகம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28, விலை: ரூ. 200.

பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வேதங்களின் சாரத்தைத் தரும் நூல். ஆன்மிகவாதிகளுக்கு பயன் தரும் புத்தகம்.

கம்பன் பிறந்த தமிழ்நாடு, முனைவர் சரசுவதி இராமநாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை: ரூ. 45.

கம்பனைப்பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் புகழும் சிறுநூல், ஆசிரியரின் சொற்பொழிவே நூல் வடிவமாக வந்துள்ளது.

அவள் வரும் நேரம், அன்பு முருகசாமி. வி, வாசகன் பதிப்பகம், 11 / 96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம் – 636015, விலை: ரூ. 40.

தன் ஆருயிர்க் காதலியிடம் தன் இதயத்தைத் திறந்து காட்டி, உணர்ச்சி பொங்க காதலை வெளிப்படுத்துவது போல் அமைந்த கவிதைகள் ஒவ்வொரு கவிதையும் ஜீவனுடனும் உயிர்த்துடிப்புடனும் விளங்குகின்றது.   நன்றி: தினத்தந்தி (3.4.2013).  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *