நம் குழந்தை பத்திரம்
நம் குழந்தை பத்திரம், அ.சங்கரலிங்கம், வாசகன் பதிப்பகம், விலைரூ.150
‘நான் எப்படி படித்தாலும் மறந்து போய் விடுகிறது’ என, குழந்தைகளின் படிப்பு பயத்தின் பிரதிபலிப்புடன், ‘நம் குழந்தை பத்திரம்’ புத்தகம், பக்கங்களில் பாதம் பதித்து நடை பழகி வரிகளில் வாலிபனாகி ஓடுகிறது.
பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என பக்கத்திற்கு பக்கம் எளிமையாக படிக்கும் முறைகளை தெளிவாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சங்கரலிங்கம்.
புத்தக பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும். இன்றைய கல்வி முறையை காட்டுகிறது என்றாலும், படிப்பு ஒரு சுமையா அல்லது எளிதா என்பதை இப்புத்தகம் படிப்பவர்கள் முடிவு செய்வர். அறிவு சார்ந்த குழந்தைகளை வளர்க்கும் சூத்திரங்களை அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறது நம் குழந்தை பத்திரம்.
– ஸ்ரீனி
நன்றி: தினமலர், 1/3/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818