குஷ்பு பக்கம்
குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ.
தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.
—-
I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ.
இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக எழுதப்பட்ட நூல். தாள் இரண்டில் முதல் தாள் இலக்கணம் குறித்தது. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், தொல்காப்பியம் முதலாக இன்றுவரை தோன்றிய இலக்கண நூல் அனைத்தும் தரப்பட்டுள்ளன. இலக்கிய வரலாற்றில் இன்றியமையாப் பகுதிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் பயின்றோர் பலரும் ஆட்சிக் கட்டில் அமர துணை புரியும் நூலாக உருவாக்கியிருக்கிறார் பேரா.கு.வெ. பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.