சினிமா சீக்ரெட்
சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இந்த மூன்றாவது பாகத்திலும் ஆச்சரியப்படத்தக்க பல சம்பவங்களை விவரிக்கிறார். கலைஞானம், குறிப்பாக தேவர் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்தினர் சந்தித்த சத்தியசோதனைகளை நெஞ்சைத் தொடும்படி எழுதியுள்ளார். சினிமா உலகம் சொர்க்கம் அல்ல, சோதனைகள் நிறைந்தது என்பதை உணர்த்துகிறார் கலைஞானம். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.
—-
எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ.
சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து, புத்தகங்களாக வெளியிடும் பணியில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இந்த வரிசையில் பிரபஞ்சன், வண்ணதாசன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள் இப்போது வெளிவந்துள்ளன. பிரபஞ்சன் தொகுதியின் விலை 115ரூ. வண்ணதாசன் தொகுதியின் விலை 90ரூ. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.