தேவதையைத் தொலைத்தவன்
தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம், விலை 100ரூ.
காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை! வந்ததும் போய்விட்டாய்! நான் கரை! எங்கே போவது? என் கண்ணீர் வற்றிவிட்டது! உன் கண்களைக் கொஞ்சம் தா! அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் கவிதைகள் கொண்ட நூல்தான். அளவில் சிறியதாக இருந்தாலும் வண்ணப்படங்கள் நிறைந்துள்ளன. விலை 100ரூ. இரண்டு புத்தகங்களும், அச்சுக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.
—-
கோடைக்கால நோய்கள் தீர்க்கும் எளிய வழிமுறைகள், மருத்துவர் ஜான் பி. நாயகம், ஆர்.எஸ். பி. வெளியீடு, சென்னை, விலை 60ரூ.
இந்த நூல் ஒவ்வொருவரிடமும் இருந்தால் கோடை காலம் என்பது நிச்சயம் வசந்த காலமே. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.