சாதேவி
சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ.
வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் என்று நாம் பார்த்த முகங்கள்தான் கதை நாயகர்களாக வருவதால் படிப்போர்க்கு கதையுடன் ஒரு நெருக்கும் எழுகிறது. சாதேவியாக அந்த அம்மாவை மாற்றுவது துணிச்சல். கனமான விஷயங்களில் யதார்த்தமான கதைகளைப் படித்த உணர்வு எழுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 1/6//2015.
—-
நேரத்தை போற்றிடுவோம் காலத்தை வென்றிடுவோம், மணிமேகலை பிரசுரம், விலை 50ரூ.
பல்வேறு தலைப்புகளில் 75 கவிதைகள் கொண்ட நூல். இந்த கணினி யுகத்தில் நேரத்தை சரியான முறையில் பின்பற்றினால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்து விடலாம். இப்படி பல கருத்துக்களை வலியுறுத்தி, கிராமிய மண்வாசனையுடன் எளிய நடையில் எளிமையான கவிதைகள் தந்து இருக்கிறார் ஆசிரியர் டி.வி.எஸ். மணியன். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.