ஆனந்த யாழ்
ஆனந்த யாழ், ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பதிப்பகம், பக். 264, விலை 170ரூ. திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல். திரைப்படப் பாடலாசிரியராக பதினைந்தே ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அக்காலகட்டத்தில் ஏறக்குறைய 1500 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை […]
Read more