நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வான் பிராக் என்ற ஆவியுலக ஆராய்ச்சியாளரின் அனுபவங்களைச் சொல்லும் இடங்கள் பிரமிப்பு. அவரைப்போலவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது அனுபவங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த வகையில் ஆவியுலகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களை உலக அளவில் அழைத்துச் செல்லும் முயற்சி இது. படிக்கப்படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more