நம்மிடையே உலவும் ஆவிகள்
நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ.
ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் எங்கே இருக்கிறது? ஆவிகள் நம்மைச் சுற்றி உலவுகின்றனவா? ஆவிகள் என்ன செய்கின்றன? ஆவிகளாக இருப்பவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்களா? என்பது போன்ற கேள்விகள் அவை. உங்கள் வாழ்வில் ஆவிகள் எப்போதும் குறுக்கிடும் என்பதை இப்புத்தகம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று ஜேம்ஸ் வான் பிராக் கூறுவது ஆச்சரியம் நிறைந்த விஷயம்தான். மேலும் அவரின் ஆவியுலக ஆராய்ச்சி அனுபவங்களையும் அறிந்து கொள்ளலாம். இதைப் படித்து முடித்ததும் பிரமிப்பின் உச்சிக்கே சென்று விடக்கூடிய அளவுக்கு இந்நூலை படைத்திருக்கிறார் விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.
—-
பாரதியார் ஞானரதம் மூலமும் உரையும், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்கம், விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-429-3.html
ஆசிரியர் பெ.சு. மணி பாரதியில் தோய்ந்த பெருமையான எழுத்தாளர். அவர் படைப்பாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. கடைசி அட்டையில் ராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீமத் ரங்கநாதானந்தஜியிடம் அவர் ஆசி பெறும் படம், வெளியாகியுள்ளது சிறப்பானது. நன்றி: தினமலர், 20/10/2013