நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more

தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர்

தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 184, விலை 80ரூ. விதவை திருமணத்தை நடத்தியவர் ஐயர்! இந்தியாவின் அரசியல், சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயரின் பணி குறித்து இந்த நூல் விளக்குகிறது. திருவையாற்றில் 1855ம் ஆண்டு பிறந்தார் ஐயர். 1878ல் ‘இந்து’ நாளிதழ், 1882ல் ‘சுதேசமித்ரன்’ நாளிதழ்களை அவர் தோற்றுவித்தார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ்ப் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு, அந்த பணியில், ஐயர் உதவி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ. தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 320, விலை 140ரூ. இந்த நூல், சமயம் சாராத சமூகச் சீர்திருத்த அமைப்புகள் பற்றி முழுமையாக எடுத்துரைத்துள்ளது. தீண்டாமைக் கொடுமை, ஜாதி ஒழிப்பு, பிறப்பு வழி ஜாதி உயர்வு ஆதிக்கம், அவற்றின் அவலங்களை மிகத் துல்லியமாக உணர்த்துகிறது. இந்தியாவின் துன்பங்களான வறுமை, ஜாதி முதலிய இரண்டு குழப்பங்கள், சமத்துவம் குறித்த பாரதியின் அணுகுமுறை ஆகியவற்றை நூல் விளக்குகிறது. பாரதியின் ஓர் அரிய கடிதம் இதில் இடம் பெற்றுள்ளது. பாரதி தம் நோக்கில், பிராமணர், […]

Read more

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம்

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பாரதியாரைப் பற்றிப் படிக்கப் படிக்க புதுப்புது கருத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த நூலிலும் அதனை உணர முடிகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் நூலாசிரியரால் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை, கட்டுரைகளாக வெளிவந்தவை. இந்த நூலில் 10 கட்டுரைகள் இருப்பினும் நான்கு கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. 1. பாரதியாரும் இந்தியத் தத்துவமும், 2. முதல் பாரதி திறனாய்வாளர் சுவாமி விபுலானந்தர், 3. பாரதி புகழ் […]

Read more

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள், பெ.சு.மணி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 362, விலை 175ரூ. தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி, திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் […]

Read more

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. வெள்ளைக்காரர் ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார்? தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது. இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட […]

Read more

கொங்கு மணம் கமழும் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328. தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more