பர்மாவும் தமிழர்களும்

பர்மாவும் தமிழர்களும், மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், பக்.200, விலை ரூ.180 பர்மாவுடன் தமிழர்களுக்கு நெடிய உறவு இருந்ததுடன், முன்னொரு காலத்தில் அங்கு தமிழர்கள் உயர்நிலையில் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்றிருந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை பின்னாளில் தாழ்ந்ததையும் விவரிக்கும் இந்நூல், இன்னொருபுறத்தில் பர்மாவின் வரலாற்றைக் கூறும் நூலாகவும் உள்ளது. 1826 இல் பர்மாவில் தமிழர்கள் குடியேறியதாகச் சொல்லப்பட்ட போதிலும், 1852 ஆம் ஆண்டு கீழை பர்மாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகுதான் அதிக அளவில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். அதற்கு முன்பு […]

Read more

பாலி முதல் மியான்மார் வரை

பாலி முதல் மியான்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், விலை 180ரூ. எழுத்தாளர் மாத்தளை சோமு, இந்தோனேஷியாவின் பாலி தீவு முதல் மியான்மார் வரை உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களை சிறப்பான முறையில் பயண நூலாக தந்து இருக்கிறார். அந்த நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழர்களையும் நேரில் கண்டு அவை பற்றிய வியக்கத்தக்க செய்திகளை பிரமிப்பூட்டும் வகையில் தந்து இருக்கிறார். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட இந்து கோவிலை கொண்ட நாடு […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more