பாலி முதல் மியான்மார் வரை
பாலி முதல் மியான்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், விலை 180ரூ.
எழுத்தாளர் மாத்தளை சோமு, இந்தோனேஷியாவின் பாலி தீவு முதல் மியான்மார் வரை உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களை சிறப்பான முறையில் பயண நூலாக தந்து இருக்கிறார்.
அந்த நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழர்களையும் நேரில் கண்டு அவை பற்றிய வியக்கத்தக்க செய்திகளை பிரமிப்பூட்டும் வகையில் தந்து இருக்கிறார்.
இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட இந்து கோவிலை கொண்ட நாடு என்பது போன்ற அரிய தகவல்களை இதில் காணமுடிகிறது. உலகின் மிகப்பெரிய கோவிலான கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வாட் பற்றி அவர் விவரிக்கும் விதம், நாமே நேரில் அங்கு சென்று வந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
பல நாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பயண நூல் மிகவும் பயன் உள்ள நூலாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 3/5/2017.