பர்மாவும் தமிழர்களும்

பர்மாவும் தமிழர்களும், மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், பக்.200, விலை ரூ.180 பர்மாவுடன் தமிழர்களுக்கு நெடிய உறவு இருந்ததுடன், முன்னொரு காலத்தில் அங்கு தமிழர்கள் உயர்நிலையில் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்றிருந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை பின்னாளில் தாழ்ந்ததையும் விவரிக்கும் இந்நூல், இன்னொருபுறத்தில் பர்மாவின் வரலாற்றைக் கூறும் நூலாகவும் உள்ளது. 1826 இல் பர்மாவில் தமிழர்கள் குடியேறியதாகச் சொல்லப்பட்ட போதிலும், 1852 ஆம் ஆண்டு கீழை பர்மாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகுதான் அதிக அளவில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். அதற்கு முன்பு […]

Read more

பாலி முதல் மியான் வரை

பாலி முதல் மியான் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக். 320, விலை 250ரூ. பயணக்கட்டுரைகளில் இந்நூல் சற்று வேறுபட்டது. பாலி, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளில் பயணம் செய்து, அங்கு புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழரையும் கண்டு, அவை தந்த அனுபவங்களையும், செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பாணி சிறப்பானதாகும். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

பாலி முதல் மியான்மார் வரை

பாலி முதல் மியான்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், விலை 180ரூ. எழுத்தாளர் மாத்தளை சோமு, இந்தோனேஷியாவின் பாலி தீவு முதல் மியான்மார் வரை உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களை சிறப்பான முறையில் பயண நூலாக தந்து இருக்கிறார். அந்த நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழர்களையும் நேரில் கண்டு அவை பற்றிய வியக்கத்தக்க செய்திகளை பிரமிப்பூட்டும் வகையில் தந்து இருக்கிறார். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட இந்து கோவிலை கொண்ட நாடு […]

Read more

பாலி முதல் மியன்மார் வரை

பாலி முதல் மியன்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக்.280, விலை ரூ.180. தமிழில் பயண இலக்கியத்தை சுவாரசியமான முறையில் எழுதுபவர்கள் குறைவு. பாலி முதல் மியன்மார் வரையிலான நூலாசிரியரின் பயண அனுபவங்கள் இந்நூலில் சுவையாகப் பதிவாகியிருக்கின்றன. பண்டைய காலத்திலேயே நமது பண்பாடு, மதம் கடல் கடந்து சென்ற நாடுகளில் பாலித்தீவு, தாய்லாந்து, பர்மா, கம்போடியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை. பாலித்தீவிலும், தாய்லாந்திலும் சாதிப் பிரிவுகள் உள்ளன; ஆனால் அங்கு சாதி மோதல்கள் இல்லை. கோயில்கள் அந்த நாடுகளில் இன்றும் பாரம்பரிய சின்னங்களாகப் பராமரிக்கப்படுதல், […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் […]

Read more