1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை – 5, விலை 240 ரூ. மகான்களின் சரிதங்களை, ‘இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப் போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்கவேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. […]

Read more