நானும் எனது நிறமும்

நானும் எனது நிறமும், ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியீடு, விலை 350ரூ. காலத்தின் பதிவு, நானும் எனது நிறமும் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தன் வரலாறு எழுதியுள்ளார். நாலு கி.மீ. தூரம் தினமும் நடந்து சென்று படித்துக் காலையிலும் மாலையிலும் தோட்ட வேலைகள் செய்து,தனக்குப் பிடித்தது ஓவியப்படிப்பு தானென்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதைப் படிக்க ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி அதில் பட்டப்படிப்பு முடித்து முதுநிலைப் பட்டமும் பெற்று இன்று சமூக உணர்வும் தமிழுணர்வும் கொண்ட ஓவியனாய் உயர்ந்து நிற்பதைக் கோர்வையாக எடுத்துச் […]

Read more

தலைவர் பிரபாகரன்

தலைவர் பிரபாகரன், பன்முக ஆளுமை, ஓவியர் புகழேந்தி, தூரிகை வெளியீடு, விலை 230ரூ. ஈழத்தில் வரைந்த கோடுகள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024221.html ஈழத்தில் நிலவிய சமாதானக் காலத்தில் அங்கு தமிழகத்தில் இருந்து பலதுறை விற்பன்னர்களை விடுதலைப்புலிகள் அழைத்து அவர்களின் திறன்களை கற்றுக்கொள்ள விழைந்தனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஓவியர் புகழேந்தி. அங்கு பலமுறை சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, புலி இயக்க உறுப்பினர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். முக்கிய தளபதிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார். பிரபாகரனையும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் […]

Read more

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி, ஓவியர் புகழேந்தி, தூரிகை, குக 63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78, விலை 175ரூ. ஆய்வுநூல் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடியான எம்.எஃப். உசேன் பற்றி ஓவியர் புகழேந்தி எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு நூற்றாண்டு இந்திய ஓவியக்கலையின் பல்வேறு கூறுகளை உசேனின் வாழ்க்கையின் வழியாகக் கூறுகிறது. இந்தூருக்கு அருகே எளிய போரா இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த உசேன் எந்த ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து முறைப்படி பயிலவில்லை. ஆனால் அவருடைய 100 […]

Read more

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 3/643, குப்பம் சாலை, காவேரி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-0.html இந்நூலின் நாயகர், ஈ.வெ.ரா. பெரியாரின் அண்ணன் மகன். இவர் பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக்கூடியவராகவும் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் சில அரசியல் முடிவுகளில் முரண்பட்டு, அண்ணாதுரையுடன் இணைந்து தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக […]

Read more