சாந்திவனத்து வேர்கள்
சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ.
கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.
—-
அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, விலை 75ரூ.
பாரதியார், பாரதிதாசன், தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியம், வை.மு.கோதை நாயகி அம்மாள் உள்பட 26 எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளன. இரை வாழ்க்கை வரலாறுகள் அல்ல, அந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விமர்சனம். எழுத்தாளர்களுடன் நடத்திய இலக்கிய விவாதங்கள்… இப்படி பல்வேறு விஷயங்களை சுவைபட எழுதியுள்ளார், எழுத்தாளர் கர்ணன். இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/6/2013.
—-
சொர்க்கத்தின் திறப்பு விழா, இறைவி, ஆனந்த் பதிப்பகம், 7வது வீதி, சூரியம்பாளையம், திருச்செங்கோடு, விலை 100ரூ.
திருக்கோவில்களில் பலவற்றின் தகவல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. ஆலயம் தோன்றிய வரலாறு, கோவிலில் வீற்றிருக்கும் தெய்வங்கள், கோவிலின் தனிச்சிறப்பு, அமைவிடம் போன்றவற்றை நூல் ஆசிரியர் தெளிவுபட தெரிவித்துள்ளார். கோவிலைபற்றி அறிந்துகொள்ளும் பெட்டகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.