மோடி கேள்விகள் பதில்கள்

மோடி கேள்விகள் பதில்கள், குமுதம் வெளியீடு, பக். 64, விலை 65ரூ. பிரதமர் மோடி குமுதம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தபோது குமுதத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு இது. மோடியுடன் பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. குமுதத்தில் வெளிவந்ததை குமுதம் பு(து)த்தகம் நூலாக கொண்டுவந்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியல் வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், நேதாஜி பற்றிய விளக்கம், மகாபாரதம், பெண்கள் பற்றிய மதிப்பீடு, இலவசங்கள் பற்றிய கருத்து, நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய விளக்கம், ஜெ.யின் […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2)

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2), வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.112, விலை 85ரூ. கதை சொல்லிகள் காலந்தோறும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களை அறநெறியில் செல்ல வழி ஏற்படுத்தித்தரும் கதைகளைச் சொல்லத்தான் பாட்டிமார்கள் இல்லை. அந்தக் குறையை நீக்கியிருக்கிறார் என்.சி. ஞானப்பிரகாசம். நம்காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிவாளர்கள், அன்பாளர்கள், அருளாளர்கள், ஞானிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக்கி, சிறுவர்களின் மனதில் பதியவைக்கும் உத்தி சிறப்பு. குழந்தைகளும் குழந்தைகளுக்குக் […]

Read more

எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?, பயிற்சிப் புத்தகம்-ரா.கி. ரங்கராஜன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 115ரூ. கதையினால் உலகத்தை வெல்லலாம். மனிதனைத் திருத்துவது, வழிகாட்டுவது, மேம்படுத்துவது, சிரிக்க வைப்பது, தியாகம் செய்ய வைப்பது, குடும்பத்துக்கும் தேசத்திற்கும் பணியாற்ற வைப்பது எல்லாமே கதைகள்தான். அந்தக் கதைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான் பயிற்சியின் மூலம் மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார். இவை முன்பு அஞ்சல்வழிக் கல்விபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்டாலும், இன்று அவை ஒருசேர, ஒரே […]

Read more

குடை மகுடம்

குடை மகுடம், மனோ இளங்கோ, மனோ ரஞ்சிதா பதிப்பகம், காரைக்குடி 630001, பக். 220, விலை 100ரூ. புதுக்கவிதை நூல். அதிகரித்த ஊழலை ஒழிக்க முருகனை வருமாறு அழைக்கும் கவிஞர், எந்தப் புற்றில் எந்தப்பாம்போ… முருகா உன்மயிலை ஏவிவிடு முருகா என்று அழைப்பது உட்பட பலகவிதைகள் உள்ளன.   —-   பசும்பொன் 24 காரட், கவிமுரசு கந்தசாமி, கவிமுரசு புத்தக பூங்கா, பக். 26, விலை 70ரூ வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல். அதில் ஒன்று தேவரய்யா, உன் […]

Read more