குடை மகுடம்
குடை மகுடம், மனோ இளங்கோ, மனோ ரஞ்சிதா பதிப்பகம், காரைக்குடி 630001, பக். 220, விலை 100ரூ.
புதுக்கவிதை நூல். அதிகரித்த ஊழலை ஒழிக்க முருகனை வருமாறு அழைக்கும் கவிஞர், எந்தப் புற்றில் எந்தப்பாம்போ… முருகா உன்மயிலை ஏவிவிடு முருகா என்று அழைப்பது உட்பட பலகவிதைகள் உள்ளன.
—-
பசும்பொன் 24 காரட், கவிமுரசு கந்தசாமி, கவிமுரசு புத்தக பூங்கா, பக். 26, விலை 70ரூ
வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல். அதில் ஒன்று தேவரய்யா, உன் அரசியல் தோட்டத்தில் அரளி விதைகளை அள்ளிப்போட்டார்கள். ஆனால் பூத்தது என்னவோ அல்லி மலர்கள் இப்படி பல கருத்துக்கள் கொண்ட புதுக்கவிதை நூல்.
—-
மாண்புமிகு மனிதர்கள் (சிறுவர்கதைகள்), வானொலி அண்ணா என். சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், பக். 88, விலை 80ரூ.
சிறுவர் மனதில் செயல்திறனை வளர்த்து, நம்பிக்கையை ஏற்படுத்தும் பணி மிகவும் சிறப்பான ஒன்று. அதற்கு கதைகளாக கருத்துக்களை சொல்லும் பாணியில் கைதேர்ந்தவர் ஆசிரியர். கவிஞர் கண்ணதாசன், வை.மு. கோதைநாயகி நாஞ்சில் நாயகன் தினமலர் டி.வி. இராமசுப்பைய்யர் என்று எட்டு வழிகாட்டிகளை ஆசிரியர் அழகாக படம் பிடித்திருக்கிறார். வழிகாட்டியாக வாழ்ந்த இவர்களின் படம், வாழ்க்கை குறிப்பு, நடந்த முக்கிய சம்பவம் என்பதை கதையாக சொல்லியிருப்பது அருமை. தினமலர் இராமசுப்பைய்யர் ஒவ்வொரு வீடாக சென்று தாம்பூலம் கொடுத்த செயல், காந்தி பாடசாலையில் சிகாமணி என்ற மாணவர் கணக்குப் பாடத்தில் பெற்ற குறைந்த மதிப்பெண் பாதிப்பை மாற்றிய அழ. வள்ளியப்பாவின் இளமைக்கால அன்பு என்று பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. மாணவ, மாணவியர் மனதில் நல்வித்துக்களை பதிக்கும் நூல். நன்றி: தினமலர், 8/12/13.