சென்னை மாநகர்
சென்னை மாநகர், மா.சு.சம்பந்தன், பாரத் பதிப்பகம், விலை ரூ.125.
சென்னை மாநகர் குறித்து இதுவரை, ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களை விட, சென்னையின் வரலாறு, அதன் பிரமாண்ட வளர்ச்சி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தன்மை உடையவை. அதனால்தான், சென்னை மாநகர் குறித்து, நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்தவகையில், இந்த நூலிலும், சென்னையின் சிறப்புகள் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களின் பெருமையும், சென்னை நகரின் வளர்ச்சியும், சென்னைக்கு இந்தியாவிலும், உலகிலும் கிடைத்து உள்ள சிறப்புகளும், இந்த நூலில் விரிவாக எழுதப்பட்டு உள்ளன. இந்த நூலின் ஆசிரியர் திறம்பட ஆராய்ந்து, வரலாற்று செய்திகளை தெரிவித்துள்ளார். இந்த நூல் 288 பக்கங்களை கொண்டது. இந்த நூல் குறித்து மேலும் அறிந்து கொள்ள எழும்பூர் கன்னிமாரா நூலகம் சென்று அறிந்து கொள்ளலாம்.
—-
தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், ஆர். பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ.
தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள 48 தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றின் தாவரவியல் பெயர்களையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இந்த நூல் விளக்குகிறது. 48 தாவரங்களின் வண்ணப் படங்களை அழகாக அச்சிட்டு, தாவரவியல் ஆர்வலர்களுக்கு வழங்கியுள்ளார். ஒவ்வொரு தாவரத்தின் பண்பையும் விரிவாக விளக்கியுள்ளார் ஆர். பஞ்சவர்ணம். தாவரவியல் என்னும் பெயரில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களை, மொழிபெயர்த்துத் தமிழில் படித்து வரும், நம் மாணவர்களுக்குத் தமிழ்நாட்டுத் தாவரங்களை அறிமுகம் செய்கிறது இந்த நூல். தமிழ் நாட்டுத் தாவரம் சார்ந்த ஆய்வுகளுக்கு, இந்த நூல் அடிப்படை வகுக்கும் என்பது தெளிவு. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 8/12/13.