தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ. தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 […]

Read more

சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு.சம்பந்தன், பாரத் பதிப்பகம், விலை ரூ.125. சென்னை மாநகர் குறித்து இதுவரை, ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களை விட, சென்னையின் வரலாறு, அதன் பிரமாண்ட வளர்ச்சி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தன்மை உடையவை. அதனால்தான், சென்னை மாநகர் குறித்து, நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. அந்தவகையில், இந்த நூலிலும், சென்னையின் சிறப்புகள் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன. சென்னையை சுற்றி உள்ள பல ஊர்களின் பெருமையும், சென்னை நகரின் வளர்ச்சியும், சென்னைக்கு இந்தியாவிலும், உலகிலும் கிடைத்து உள்ள சிறப்புகளும், இந்த […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ. பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, […]

Read more