சென்னை 1639க்கு முன் பின்
சென்னை 1639க்கு முன் பின், டாக்டர். கு. பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பற்றி, அறிந்து கொள்வதில் யாருக்கும் எப்போதும் ஆர்வம்தான். சென்னை, நாட்டின் மற்ற நகரங்களுக்கு இணையாக உருவெடுத்து வருகிறது. ஆனாலும், சென்னையின் வாழ்வியல் வரலாற்றில், 1639 சிறப்பு மிகு ஆண்டு. ஏனெனில், அதுதான் சென்னை பிறந்த ஆண்டு. சின்னஞ்சிறு ஊர்களின் சிதறலாக காணப்பட்ட, சென்னைப் பட்டினத்தின் ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. வடசென்னையில் நாணயத் தொழிற்சாலை உருவாக்கும் திட்டத்தின் படி, தங்க நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டடம் உருவாக்கப்பட்டது. அந்த கட்டம் இருந்த சாலை காரணமாக, அதற்கு தங்க சாலை என்ற பெயர் வந்தது. அந்த வகையில் எழும்பூர், ஏழு கிணறு, செம்பியம், திருவல்லிக்கேணி ஊர்களின் பெயர்க்காரணங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 172 பக்கமுள்ள இந்த நூல், சென்னை செங்குன்றம் முழுநேர நூலகத்தில் கிடைக்கிறது. நன்றி: தினமலர், 1/12/13
—-
உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள், த.அரவிந்தன், அருந்தகை, ஈ220, 12ஆவது தெரு, பெரியார் நகர், சென்னை 6000082.
பத்து சிறுகதைகள் அடங்கிய ஒரு சிறு கதைத் தொகுப்பு நூல் இது. முத்தாய்ப்பாக அமைந்த ‘உள்நாக்குகள் மாநாட்டில் பதினான்கு தீர்மானங்கள்’ கதை நூலின் தலைப்பாகியுள்ளன.
—-
முரண் எங்கெங்கு காணினும், சேஷ், வெங்க், எக்ஸ்எல்ஓசி. சென்னை 600033.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் உறவு, உண்மை, அறிவு, நேரம், ரசனை, தனிநபர், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளும் அவற்றின் மூலம் தீர்வுகளும் இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன. நன்றி: இந்தியா டுடே, 11/12/13.