தமிழச்சி ஆண்டாள்! மெய்சிலிர்க்கும் காவியம்

தமிழச்சி ஆண்டாள்! மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு,விலைரூ.290 இது ஆண்டாளின் கதை மட்டும் அல்ல! விஷ்ணுவின் அவதாரங்களையும் லீலைகளையும் உள்ளடக்கிய கதை தான் தமிழச்சி ஆண்டாள். ஆண்டாள் எங்கு, எப்படித் தோன்றினாள், அவளை வளர்த்த பெரியாழ்வார், அன்னை வீரராஜாதேவி யார் எனப் புராணங்களின் அடிப்படையிலும், வரலாற்றுச் சம்பவப் பின்னணியிலும் கோதை சூடிய பூக்களைப் போலவே அழகாகப் பின்னப்பட்டிருக்கிறது இந்தக் கதை. ‘திருப்பதிக்குச் சென்றால் ஏன் கோவிந்தா என்று அழைக்கிறோம்?’ என்பது ஒரு சிலருக்கே தெரியலாம் தவிர நிறைய பேருக்குத் தெரியாது. இது […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு, விலை 290ரூ. கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்… இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள். அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் […]

Read more

தொண்டர் கோவே

தொண்டர் கோவே, வீ. செல்வராஜ், குமுதம் வெளியீடு, விலை 200ரூ. தொண்டர்கோவே என்றழைக்கப்படும் கோ. வேங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாற்ற நூல். அவரது வாழ்க்கை முழுவதும் சமுதாயத் தொண்டுகள் நிறைந்ததாகவே உள்ளது. காந்தியடிகளைப் போல அவரும் ஒரு சமுதாய விஞ்ஞானியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் ஒரு பிறவித் தொண்ட என்ற உண்மையை அறிய முடிகிறது என விவரிக்கிறார் நூலாசிரியர் வீ. செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. பாதைகளை ஆக்கிரமித்து கடை நடத்துகிறார்கள். மதுபோதையில் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுகிறார்கள். நாம் ஒருவரைப் பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்யப் போனால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். இப்படி வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள சட்டம் எந்த வகையில் உதவி செய்ய முடியும்? இப்படிப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தீர்ப்புகள் எவை? என்பன போன்றவற்றை […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. ஒரு பிரச்சினை, அது தொடர்பான வழக்கு, அதற்குரிய தீர்ப்பு இந்த மூன்றையும் ஒன்றிணைக்கம் நோக்கத்தில் தொகுக்கப்ட்ட நூல். பிரச்சினைகளுக்கு எளிதாக, நியாளமான தீர்ப்பினை பெற பாமர மக்களுக்கு உதவும் சட்ட ஆலோசனை நூலாக விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் திகில் நிறைந்த கதைபோலக் கொடுத்திருப்பதால், படிப்பவர்களுக்கு ஒரு நாலை படித்த உணர்வை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது, இதற்கு நீதிபதிகள் என்ன தீர்ப்பு […]

Read more

மோடி கேள்விகள் பதில்கள்

மோடி கேள்விகள் பதில்கள், குமுதம் வெளியீடு, பக். 64, விலை 65ரூ. பிரதமர் மோடி குமுதம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தபோது குமுதத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு இது. மோடியுடன் பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. குமுதத்தில் வெளிவந்ததை குமுதம் பு(து)த்தகம் நூலாக கொண்டுவந்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியல் வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், நேதாஜி பற்றிய விளக்கம், மகாபாரதம், பெண்கள் பற்றிய மதிப்பீடு, இலவசங்கள் பற்றிய கருத்து, நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய விளக்கம், ஜெ.யின் […]

Read more

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015, குமுதம் வெளியீடு, சென்னை, பக். 274. கிருஷ்ணன் மணியம், மாநாட்டுத் தலைவரான டத்தோஸ்ரீ உத்தமா ச. சாமுவேலு பற்றி எழுதியுள்ள தமிழ்மொழிக் காதலர் கட்டுரை, அவர் தமிழ் மொழி மீது கொண்ட தணியாத தமிழ்க் காதலையும், இளம் வயதிலிருந்து அவர் கடந்து வந்த கரடு முரடான சவால்கள் நிறைந்த பாதைகளையும் விவரிக்கிறது. இதுவரை நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை ஒரு மீள் பார்வை செய்துள்ளார் சு. இராசாராம். மலேசியாவில் தமிழ்க் கல்வி அன்றும் […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ. இந்திய விடுதலைப் போரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என மத பேதமின்றி எல்லோரும் பங்கேற்றனர். 1857-1859களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சி, புரட்சி குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும் அதில் பங்கேற்ற இஸ்லாமிய மன்னர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் பொதுமக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் இந்த நூலில் ஆசிரியர் செ. திவான் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இந்திய சுதந்திரப் போரில் தென்னகத்தின் பங்களிப்பு குறித்தும், […]

Read more