தொண்டர் கோவே

தொண்டர் கோவே, வீ. செல்வராஜ், குமுதம் வெளியீடு, விலை 200ரூ. தொண்டர்கோவே என்றழைக்கப்படும் கோ. வேங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாற்ற நூல். அவரது வாழ்க்கை முழுவதும் சமுதாயத் தொண்டுகள் நிறைந்ததாகவே உள்ளது. காந்தியடிகளைப் போல அவரும் ஒரு சமுதாய விஞ்ஞானியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் ஒரு பிறவித் தொண்ட என்ற உண்மையை அறிய முடிகிறது என விவரிக்கிறார் நூலாசிரியர் வீ. செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமா காளியம்மன் கல்வி அறக்கட்டளை, மதுரை, பக். 576, விலை 400ரூ. காந்தியக் கொள்கையை 11 பெருந்தலைப்புகளில் 138 உள் தலைப்புகளில் மிக மிக எளிமையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். சர்வோதய தத்துவத்தை விளக்கும் வகையில் ஜெய்ஜகத் சுவாமிகளும் சிஷ்யர்களும் எனும் தலைப்பில் உழவர், நெசவாளர் உழைப்பை வெளிப்படுத்தும் நூலாசிரியர் களத்து மேட்டுக் காட்சிகளின் மூலம் கிராமப்புற சமதர்ம சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். அதன் மூலம் உடல் உழைப்பினால் வாழும் ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், உழுது பாடுபடும் ஓர் […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இந்நூல் கேரளாவின் உயரிய விருதான வயலார் அவார்டும், மத்திய சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற நாவல். கனவைப் போன்றதொரு கதை சொல்லல் முறையில், வாழ்க்கையின் குழப்பமான புதிர்களை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. மனித உறவுகளில் உண்டாகக்கூடிய பிளவுகளை, தாய் பிரியம்வதா மூலமும் அந்தத் தாயிடமிருந்து விலகிக்கொண்டிருக்கும் மகள் மூலமும் நாவல்  விவரிக்கிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதையை தமிழில் […]

Read more

சர்வோதய ஆளுமைகள்

சர்வோதய ஆளுமைகள், வீ. செல்வராஜ், அருள்மிகு வீரமாகாளி அம்மன் கல்வி அறக்கட்டளை, சென்னை, பக். 576, விலை 400ரூ. காந்தியம் பைத்தியக்காரரின் திட்டம் தமிழகத்தில் காந்தியத்தின் அருமை பெருமைகளையும், சர்வோதய கருத்துக்களையும் பரப்பியவர், இந்நூலாசிரியர் அமரர் வீ. செல்வராஜ். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இயக்கத்தின் தியாகியாகவும், உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, தமிழ்நாடு சர்வோதய சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், பல்வேறு வார, மாதஇதழ்களின் ஆசிரியராகவும் விளங்கிய நூலாசிரியர், எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வம் எனும் பாரதியின் வாக்கைக் […]

Read more