வாதி பிரதிவாதி நீதி
வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ.
ஒரு பிரச்சினை, அது தொடர்பான வழக்கு, அதற்குரிய தீர்ப்பு இந்த மூன்றையும் ஒன்றிணைக்கம் நோக்கத்தில் தொகுக்கப்ட்ட நூல். பிரச்சினைகளுக்கு எளிதாக, நியாளமான தீர்ப்பினை பெற பாமர மக்களுக்கு உதவும் சட்ட ஆலோசனை நூலாக விளங்குகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் திகில் நிறைந்த கதைபோலக் கொடுத்திருப்பதால், படிப்பவர்களுக்கு ஒரு நாலை படித்த உணர்வை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது, இதற்கு நீதிபதிகள் என்ன தீர்ப்பு வழங்கியிருபப்ர்கள்? என்ற ஆவலையும் தூண்டுகிறது.
50 வித்தியாசமான வழக்குகளை, அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்ப்புகள் இந்திய அளவில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் மாற்றங்களை நூலாசிரியர் எடுத்துக் கூறி உள்ளார். சட்டம் பயில்வோரும், இளம் வழக்கறிஞர்களுக்கும் வாதி பிரதிவாதி நீதி என்ற இந்த நூல் ஒரு சட்ட வழிகாட்டியாத் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 20/7/2016.