மோடி கேள்விகள் பதில்கள்
மோடி கேள்விகள் பதில்கள், குமுதம் வெளியீடு, பக். 64, விலை 65ரூ.
பிரதமர் மோடி குமுதம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தபோது குமுதத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு இது. மோடியுடன் பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. குமுதத்தில் வெளிவந்ததை குமுதம் பு(து)த்தகம் நூலாக கொண்டுவந்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியல் வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், நேதாஜி பற்றிய விளக்கம், மகாபாரதம், பெண்கள் பற்றிய மதிப்பீடு, இலவசங்கள் பற்றிய கருத்து, நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய விளக்கம், ஜெ.யின் அரசியல் போராட்டம், அடுத்த சவால் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நுட்பமான முறையில் பதில் தந்துள்ளார்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.
—-
ஓடாத குதிரைகள், வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ.
வானொலி நாடகங்களுக்கு புத்துயிர் ஊட்டும் நூல். சின்னச் சின்ன பாத்திரங்கள் மூலம் சமூக நடப்பை எடுத்துச் சொல்லும் நாடகநூல்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/5/2016.