எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி,

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி, மணிவாசகர் பதிப்பகம், விலை 90ரூ. கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுத, எம்.ஜி.ஆர். நடித்த காலக்கட்டம், தமிழ்த்திரை உலகில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். சிறந்த பாடல்கள் வரிசையாக வந்தன. அருமையான பாடல்கள் அணிவகுத்தன. கவிஞர் பொன்.செல்லமுத்து எழுதிய இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். படங்களில் கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல்கள் விவரம் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிய மற்ற கவிஞர்களின் விவரமும் உள்ளது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவரும் விரும்பி ரசிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் பதிப்பகம், பக். 736, விலை 460ரூ. எம்.ஜி.ஆரின் சுயசரிதாதான் ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூல் வடிவம் கொண்டுள்ளது. அவர் கைப்பட எழுதியது என்பது இதன் தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர். பங்கு கொண்ட நாடக அமைப்புகள், பட நிறுவனங்கள், தன்னோடு பணியாற்றிய சக கலைஞர்கள், அவர் சாந்த கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடும்ப நண்பர்கள், தொண்டர்கள் என்று யாரையும் விடாமல் உள்ளதை உள்ளபடி தைரியமாக எழுதிச் செல்கிறார். அவருக்கு உதவியோரையும் அவரை படுபாதளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரைப் பற்றியும் […]

Read more

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர், கே.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம் – ஆர். கோவிந்தராஜ், வெளியீடு- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2, விலை 110ரூ. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் கலை, அரசியல் மற்றும் வெகுமக்கள் கலாச்சாரத்தில் இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் தமிழ் நினைவில் அவர் அழிக்க முடியாத புராணிக கதாபாத்திரமாக நீடிக்கிறார். அவரது வள்ளல் தன்மை, மனிதாபிமானம், மக்கள் ஈர்ப்பு, அரசியல், சினிமா என சகல பரிமாணங்களிலும் நு¡ல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் […]

Read more