நான் ஏன் பிறந்தேன்?
நான் ஏன் பிறந்தேன்?, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் பதிப்பகம், பக். 736, விலை 460ரூ.
எம்.ஜி.ஆரின் சுயசரிதாதான் ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூல் வடிவம் கொண்டுள்ளது. அவர் கைப்பட எழுதியது என்பது இதன் தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர். பங்கு கொண்ட நாடக அமைப்புகள், பட நிறுவனங்கள், தன்னோடு பணியாற்றிய சக கலைஞர்கள், அவர் சாந்த கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடும்ப நண்பர்கள், தொண்டர்கள் என்று யாரையும் விடாமல் உள்ளதை உள்ளபடி தைரியமாக எழுதிச் செல்கிறார்.
அவருக்கு உதவியோரையும் அவரை படுபாதளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரைப் பற்றியும் தக்க சான்றுகளுடன் குறிப்பிடுகிறார். மற்றவர்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்நூலின் இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. படிக்கப் படிக்க பிரமிப்பும் சுவையும் கூடுதல்.
நன்றி: குமுதம், 7/9/2016.