நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, விலை 350ரூ. இலங்கை போரால் அழிந்த கிராமங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஈழ மக்களின் வாழ்வு, போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இப்புத்தகம், ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணம். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more