நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more