தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, விலை 350ரூ. இலங்கை போரால் அழிந்த கிராமங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஈழ மக்களின் வாழ்வு, போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இப்புத்தகம், ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணம். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more