நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ.
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார்.
“நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளையும், அயல்நாடுகளுக்குச் சென்று நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தைத் திரட்டியது, செயலாளராக வந்த எமிலியை காதல் திருமணம் செய்தது, யுத்தத்தில் நேதாஜியின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹிட்லரும், ஜப்பானும் தோல்வி அடைந்தது, அதன்பிறகு நேதாஜி என்ன ஆனார் என்ன மர்மம்… இதுபற்றி எல்லாம் சுவைபட விறுவிறுப்பாக எழுதியுள்ளார் குகன்.
நேதாஜி பற்றிய சிறந்த புத்தகம் இது. அபூர்வ படங்களும் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 31/5/2017.