ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ.

ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை.

ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது வாழ்க்கை கனவுகள், லட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு துவங்கி சர்வதேச அரசியல் வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு மாபெரும் த்ரில்லர். படித்து இன்புறுங்கள் பட்டுக்கோட்டைஸ்பெஷல்!

-எஸ். குரு.

நன்றி: தினமலர், 6/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *