ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 200ரூ.

பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய தொடர்கதையின் தொகுப்பே இந்நூல். விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘திரில்லர்’ கதை.

ஒரு விமானி, ராணுவ அதிகாரி, மாவோயிஸ்ட்டுகள், சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் என பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இக்கதையில் பயணிக்கின்றன. அவர்களின் லட்சியம், அடிப்படை சித்தாந்தம், காதல், விரோதம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சர்வதேச அரசியல் பிரச்சினை வரை நடப்பு நிகழ்வுகளுடன் வலைப்பின்னலாக கதையை நகர்த்தி பிரமிக்க வைக்கிறார் ஆசிரியர்.

44 அத்தியாயங்கள் கொண்ட நீளமான கதை என்றபோதிலும் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் விறுவிறுப்பாக கதை நகர்வதால் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது. விரைவில் இக்கதை திரைப்படமாக உருவாகி வெள்ளித்திரையில் வலம் வரப்போகிறது என்பது வாசகர்களுக்கான கூடுதல் தகவல்.

நன்றி: தினத்தந்தி.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *