தமிழ்க்கிளை மொழி அகராதி
தமிழ்க்கிளை மொழி அகராதி, தொகுப்பாசிரியர் இரா.பாலகிருஷ்ணன், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ.
ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு சொல், ஒரு வட்டாரத்தில் ஒரு விதமாகவும், வேறு வட்டாரத்தில் வேறு விதமாகவும் குறிப்பிடப்படுவது கிளை மொழிச் சொற்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள இது போன்ற சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருளுடன் அவை எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை என்பதையும் அகராதியாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
சுமார் 5 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை மொழிச் சொற்கள் உள்ளன என்பது இதம் மூலம் தெரியவருகிறது. தமிழ் ஆர்வலர்களுக்கு இந்த நூல் நல்ல கையேடாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818