சிலம்பின் பரல்கள்
சிலம்பின் பரல்கள், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 40ரூ.
சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலைதான். பதினாறு தலைப்புகளில் சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்துகிடக்கும் மனோரஞ்சித மலர்களையும் வெளிக்கொணர்கிறார் ஆசிரியர் என்று முனைவர் தி. ராசகோபாலன் பாராட்டியுள்ளார். சிலப்பதிகார காப்பியத்தில் முத்தமிழும் கொஞ்சிக் குலவுகின்ற அழகையும், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் மாண்பையும், பாத்திர படைப்பின் திறத்தையும், தொடர்களின் இனிமைச் சுகத்தையும், இளங்கோவின் புலமைப் பெருக்கையும் உணர்ந்து சுவைக்க ஒவ்வொருவரும் இந்நூலை படிக்க வேண்டும். -ஜவஹர்.
—-
மர்மயோகி நாஸ்டிரடாம்ஸ், கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம், பக். 254, விலை 160ரூ.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்டிடாமஸ் என்ற, புதிர் மிகுந்த ஒரு மனிதரின் ஏபத்துக்களிலிருந்து சில கருத்துக்களை எடுத்து வைத்துகொண்டு, தற்கால சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி, அதிசயப்படுத்தும் வேலைகள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். இந்த நாஸ்டிரடாம்ஸ் ஜோசியரா, தீர்க்கதரிசியா பின்னால் நிகழப்போவதை முன்கூட்டியே அறிந்து தெளிந்த இஎஸ்பியா? அவர் கூறியபடி உலகம் டிச 21, 2012 அன்று அழியவில்லை. இந்த நாஸ்டிராம்ஸ் என்ற மர்மப் புதிர் பற்றிய புத்தகம். -வி. பாலு. நன்றி: தினமலர், 23/2/2014.