இது கதையன்று வாழ்க்கை
இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், எழில் நிலையம், விலை 140ரூ.
தமிழ் வாழ்ககை
நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர். சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர், கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழக்கை’. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச்செல்கிறார்.
பெரும்பாலும் தமிழ் இலக்கிய மேடைகளில் கவியரங்குகளில் கழிந்த வாழ்க்கை இவருடையது. அணிந்துரையில் முனைவர் எ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்த தமிழறிஞரின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே இனிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகளே.
திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டி, அந்த பக்கமே போகவேண்டாம் என முடிவு செய்த நிகழ்ச்சிகள் புன்னகை வரவழைக்கின்றன.
நன்றி: டிசம்பர், அந்திமழை, 2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818