பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு), சிவ. விவேகானந்தன், காவ்யா,  பக்.1185, விலை  ரூ.1200.

பாரதத்தில் தோன்றி உலகம் முழுதும் பரவி அழியாப் புகழ் கொண்ட இரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும்.வால்மீகியின் இராமாயணத்தையொட்டி, கம்பர் உள்ளிட்ட சிலர் இராமாயணத்தை எழுதினர்.அவ்வாறே வியாசரின் மகாபாரதத்தையொட்டிப் பலரும் பாரதம் படைத்தனர்.

இந்த “பாகவதப் பாரதம்’, பாகவதம், பாரதம் ஆகிய இரு இதிகாசங்களையும் பகுத்து ஆராய்ந்து, அவற்றின் சிறப்புகளைத் தேர்ந்தெடுத்து பாகவதத்தின் கூறுகளை பாரதத்தில் பொருத்தி ஏறத்தாழ 26,000 அடிகளைக் கொண்டதாக அம்மானை வடிவில் புதிய பாரதமாகப் படைக்கப்பட்டுள்ளது.

இது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்பநாப நாடார் என்பவரால் பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

இந்நூலுக்கு ஆசிரியரால் எழுதப்பட்டிருக்கும் ஆராய்ச்சி முன்னுரை வியப்பளிக்கிறது. அதில், தமிழில் எழுதப்பட்டிருக்கும் பாகவதங்கள் குறித்தும், உரைநடை வடிவில் வந்துள்ள “சமண பாகவதம்’, “ஜைன பாகவதம்’ ஆகியவை குறித்தும்,”அல்லி அரசாணி மாலை’, “ஆரவல்லி சூரவல்லி’ போன்ற நாட்டுப்புற இலக்கிய பாகவதம் குறித்தும், “புறநானூறு’, “சிலப்பதிகாரம்’, “பெரும்பாணாற்றுப் படை’, “சீவக சிந்தாமணி’, “நாலாயிர திவ்விய பிரபந்தம்’, “முத்தொள்ளாயிரம்’, “கலிங்கத்துப் பரணி’ போன்ற இலக்கிய நூல்களில் எங்கெங்கெல்லாம் பாரதம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன என்பதை மேற்கோள் காட்டியும் சிறப்பாக விவரித்திருக்கிறார்.

பாரதத்திலும் பாகவதத்திலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரு கருவூலம் என்று கூறல் மிகையன்று.

நன்றி: தினமணி, 6/12/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031381_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *