போராடக் கற்றுக்கொள்
போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ.
உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.
இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் சில நல்ல நூல்களை வாசித்தல். ஏராளமான நீதிமொழிகள், வெற்றி பெற்றோரின் கூற்றுகள், எழுச்சியூட்டும் அசலான சம்பவங்கள் ஆகியவற்றைக் கோர்த்து அழகிய வடிவில் உருவாகி உள்ளது போராடக் கற்றுக்கொள் என்ற இந்நூல்.
சட்டம் ஒழுங்கு காவலதிகாரியாக வெகுகாலம் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் இந்நூலாசிரியர். இளைஞர்களைக் குறிவைத்து இதை எழுதி உள்ளார்.
நன்றி: டிசம்பர், அந்திமழை, 2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818