போராடக் கற்றுக்கொள்

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ. உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் […]

Read more

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள்

வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. புத்தகத்தை பார்த்தவுடன், படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். நுாலாசிரியரின் சீருடையுடன் கூடிய படமும், பக்கத்தில் முத்தான வாசகம், ‘முயற்சிகள் தோற்கலாம்; முயற்சிப்பவர் தோற்பதில்லை’ என்ற வாசகமும், அமரகவி, தாராபாரதியின், ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது. முயற்சியின் மேன்மையை வலியுறுத்துகிறது. ஆண்மை என்பது ஆளும் தன்மை என்ற பொருளில், ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி, செய்வதற்கு […]

Read more